நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்

நீலகிரி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வாகனங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வாகனங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் இயந்திர விழிப்புணர்வு வாகன பிரச்சார சேவையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதில், சுமார் 8 வாகனங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகனங்கள் செல்கின்றன. அப்போது, வாக்காளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்த வாக்குகளை, தாங்கள் அளித்த சின்னத்தில்தான் பதிவாகியுள்ளதா..? என தெரிந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...