கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கால்டாக்சி நிறுவனங்கள்..! கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அமைச்சகத்திற்கு கடிதம்

கோவை : பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கால்டாக்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் கடிதம் எழுதியுள்ளது.


கோவை : பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கால்டாக்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் கடிதம் எழுதியுள்ளது. 

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- சமீபகாலங்களில் தமிழகத்தில் சாலை போக்குவரத்தில் அதிக இடம் பிடித்தவர்கள், வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்சி போன்றவைதான். 

பல்வேறு விதமாக போக்குவரத்து உதவியால் மக்கள் நியாயமான கட்டணத்தில் தங்களுடைய பிரயாணத்தை செய்து வருகின்றனர். இதற்கு முன், பல ஆண்டுகளாக ஆட்டோ, டாக்ஸி பிரச்சனைகளிலிருந்து விடுவித்ததற்கு நுகர்வோர் அமைப்புகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ஓலா, உபர் போன்ற நிறுவனங்களின் கார், ஆட்டோக்களில் சமீபகாலமாக, கோவையில் மட்டுமல்ல சென்னை போன்ற பெருநகரங்களில் கூட, போக்குவரத்து தேவைகளை முன்பதிவு ஆப் மூலமாக அல்லது ஆன்லைன் மூலமாக டவுன்லோடு செய்து வாடிக்கையாளர் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

முன்பதிவு செய்யும் போது அதிலேயே காட்டக்கூடிய கட்டணம் ரூ. 100 எனில், வாடிக்கையாளர் சேரும் இடத்தை சென்றடைந்த பிறகு, வாடிக்கையாளரிடம் ரூ. 130 அல்லது ரூ. 140 என்று காட்டுகிறது. இது நெரிசல் நேரம் அல்லது சாதாரண நேரம் என்றாலும் கூட, நாம் எந்த இடத்தை நோக்கிப் பயணம் செய்தாலும் வாகனம் சென்று அடையும் போது கூடுதலாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எந்த இடத்திலும் நாம் முன்பதிவு செய்திருந்த தொகையை வசூலிப்பதாக இருப்பதில்லை. இது ஒரு ஏமாற்று வேலை என்றே வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

மேலும், மற்ற அரசு வாகனங்கள், ஆட்டோ, கார்களில் இருக்கக்கூடிய ஓட்டுநர்கள் முறையாக பேட்ஜ் அணிந்து, அடையாள அட்டையுடன் சீருடையில் வருகின்றனர். ஆனால், இதுபோன்ற கார், அல்லது ஆட்டோவில் இருக்கக்கூடிய ஓட்டுநர்கள் சீருடை விதிமுறையை கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...