கோவையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் தொடக்கம்

கோவை : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் கருவி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.



இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் (பொ) துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இன்று முதல் 5 நாட்களுக்கு, ஒரு தொகுதிக்கு 6 அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 60 பிரச்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...