20 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த கோவை ரயில்நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம் மூடப்படுகிறது

கோவை : தெற்கு ரயில்வே சார்பில் விடப்பட்ட டெண்டரை தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் கைப்பற்றிய நிலையில், 20 ஆண்டுகளாக கோவை ரயில்நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகம் மூடப்படுகிறது.

கோவை : தெற்கு ரயில்வே சார்பில் விடப்பட்ட டெண்டரை தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் கைப்பற்றிய நிலையில், 20 ஆண்டுகளாக கோவை ரயில்நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகம் மூடப்படுகிறது. 

நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமான கோவை ரயில்நிலையத்தின் தளம் 1 மற்றும் 3-ல் ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மீண்டும் கடை வைப்பதற்கான உரிமம் பெறுவதற்கான டெண்டர் நடைபெற்றது. இதில், தெலுங்கானாவைச் சேர்ந்த வெங்கடேஷ்வரா உணவகம் என்ற நிறுவனம் டெண்டரை எடுத்துள்ளது. 

இதன் மூலம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகம் மூடப்படுகிறது. இது, பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறியதாவது :- சேலம் தெற்கு ரயில்வே பிராந்தியத்திற்குட்பட்ட தென்னக ரயில் நிலையங்களில் உள்ள புத்தக நிலையம், பாலகங்கள், உணவகங்கள் என பல்வேறு கடைகளுக்கு ஒவ்வொரு 4 ஆண்டுக்கும் ஒருமுறை டெண்டர் நடத்தப்படும். 

அந்த வகையில், கோவை ரயில்நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகத்தின் உரிமம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தெற்கு ரயில்வே சார்பில் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டது. அந்த ஏலத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டரை எடுத்துள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக மாவட்ட ஆவின் பாலக தலைவர் கே.பி. ராஜு கூறுகையில், "நாங்கள் 4 லட்சத்திற்கு டெண்டர் கோரினோம். ஆனால், தெலுங்கானா நிறுவனம் 8 லட்சத்திற்கு டெண்டரை கோரியது. கோவை ரயில்நிலைய ஆவின் பாலகம் மூலமாக நாள்தோறும் 500 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டது. இந்த முறை டெண்டரில் தோல்வியடைந்து விட்டோம். 

இதனால், கேரள மாநிலத்தில் விநியோகிப்பதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதாவது, சுமார் 15,600 லிட்டர் கூடுதலாக கேரளாவிற்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய முடியும் என நம்புகிறோம்," எனக் கூறினார். 

கோவை ரயில்நிலையப் பயணி கூறுகையில், "கோவையில் அடையாளமாக ஆவின் பாலகமும் திகழ்ந்து வந்தது. குறிப்பாக, கோவை ரயில்நிலைய ஆவின் பாலகம், பயணிகளுக்கு ஏற்றபடி தனிச் சுவையை வழங்கியது. தற்போது, ஆவின் மூடப்படுவது, என்னைப் போன்ற ஆவின் பாலக விருப்பதாரர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...