ஆனைகட்டி அருகே காட்டு யானைகளை விரட்டச் சென்ற போதை ஆசாமி மாயம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கோவை : ஆனைகட்டி அருகே சாலையோரத்தில் நின்ற காட்டு யானைகளை மதுபோதையில் விரட்டச் சென்ற நபர் மாயமான சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை : ஆனைகட்டி அருகே சாலையோரத்தில் நின்ற காட்டு யானைகளை மதுபோதையில் விரட்டச் சென்ற நபர் மாயமான சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த 6-ம் தேதி இரவு கோவை - ஆனைகட்டி சாலையில் உள்ள தூமனூர் பிரிவில் குட்டி யானை உள்பட 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனால், வாகனங்கள் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தன. எந்த தொந்தரவும் இல்லாததால், யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் நுழைந்தன. ஆனால், யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், மது அருந்தியிருந்த ஒரு நபர், பேருந்தில் இருந்து இறங்கி, வெகு வேகமாக யானைகளை நோக்கி நடந்தார். 



இதனைக் கண்ட பேருந்தில் இருந்த சக பயணிகள், யானைகளிடம் போக வேண்டாம் எனக் கூச்சலிட்டனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத அந்த நபர், யானைகளுக்கு மிக அருகில் சென்றார். இந்த நிலையில், திடீரென பெண் யானை அந்த நபரை வேகமாக துரத்தியது. இதைக் கண்ட அந்த நபரும் தலைதெறிக்க ஓடினார். 

இதையடுத்து, அந்த நபரின் நிலை என்ன..? என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் பேருந்தில் இருந்த ஒரு நபரால் படம் பிடிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

"கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மனித - யானைகள் மோதல் அதிகரித்துக் காணப்படுகின்றன. எதிர்பாராதவிதமாக, யானைகள் கண்ணில் தென்படுபவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

பின்னர், மனிதர்கள் தொந்தரவு செய்வதால்தான் யானைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

உடுமலையில் விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த சின்னத்தம்பியிடம் போதையில் ஒருவர் அத்துமீறி நெருங்கியுள்ளார். இதையடுத்து, சின்னத்தம்பி தாக்குவதற்கு முன்னதாக, அந்த நபரை வனத்துறையினர் அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...