கோவையில் பாலியல் குற்றங்களை தடுக்க பெண்கள் அமைப்புடன் போலீசார் இணைந்து பணியாற்ற வேண்டும்

கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பெண்கள் அமைப்புடன் போலீசார் இணைந்து பணியாற்ற வேண்டும் என அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் துணை தலைவர் யூ. வாசுகி தெரிவித்துள்ளார்.

கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பெண்கள் அமைப்புடன் போலீசார் இணைந்து பணியாற்ற வேண்டும் என அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் துணை தலைவர் யூ. வாசுகி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மத்திய குழு உறுப்பினர் யூ. வாசுகி கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்கள் அமைப்புகளுடன் போலீசார் இணைந்து பணியாற்ற வேண்டும். குறிப்பாக, மாதம் ஒருமுறை பெண்கள் பாதுகாப்பு குறித்து கூட்டம் நடத்த வேண்டும்.

கோவையில் தனியார் பள்ளிப் பேருந்தில் 4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்நிலையத்தில் குழந்தையைப் பள்ளி சீருடையில் வைத்தே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

போஸ்கோ சட்டவிதிமுறைகளை போலீசார் தெரிந்து கொள்ளவில்லை. அதேவேளையில், குற்றவாளிகள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்தான் இந்த விவகாரத்தில் கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்தது, என்றார். 

தொடர்ந்து, பா.ஜ.க. அரசின் 4.5 ஆண்டுகால ஆட்சியில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்து குறித்து அவர் பேசியதாவது :- பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையைக் கேட்டு பொதுமக்கள் பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கை வைத்து விடுவார்கள் என நினைக்கின்றனர். எப்படி நம்பிக்கை வரும்..? 

அனைத்து துறைகளிலும் பா.ஜ.க. அரசு தோல்வியையே தழுவி இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை, தற்போதைய பா.ஜ.க., ஆட்சியில் நிலவுகிறது. அதேவேளையில், 10 கோடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பிரதமர், தற்போது லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார். 

 

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு தொழில்களை முடக்கிவிட்டது. ஆனால், தற்போது வரை அரசின் நடவடிக்கைகள் வெற்றி பெற்றதாகக் கூறி வருகின்றனர். 

அதேவேளையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசு, வேளாண் துறையில் நல்ல இலாபம் கிடைத்து வருவதாக முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...