கோவை : மேட்டுப்பாளையம் அருகே யானை தடுப்பு அகழியைக் கடக்க இயலாமல் விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த குட்டி யானையை மீட்டு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துரை கிராமத்தில் இன்று அதிகாலை காட்டு யானைக் கூட்டம் ஒன்று குட்டியுடன் புகுந்து சின்னராஜ் என்பவரது விவசாய நிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனைக் கண்ட விவசாயிகள், மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி, வேட்டைத்தடுப்பு காவலர்களுடன் சென்ற மேட்டுப்பாளையம் வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.
அப்போது, யானைகளை காட்டிற்குள் விரட்டும் போது அனைத்து யானைகளும் வனப்பகுதிக்கு சென்ற நிலையில், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு குட்டியானை மட்டும் பிரிந்து யானை தடுப்பு அகழியை தாண்டி வனத்திற்குள் செல்ல முடியாமல் விவசாய நிலத்திலேயே சுற்றி வந்தது.
யானைஅகழி தடுப்பு குழிகள் ஆழமாக இருந்ததால், அதனை அந்த குட்டியால் தாண்டி வனத்தினுள் செல்ல முடியவில்லை. தாய் யானை வனப்பகுதிக்கு சென்றதால் செய்வதறியாது நின்ற குட்டியானையை பலகட்ட போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.
பின்னர், அகழியை தாண்டி கொண்டு சென்று விடப்பட்ட குட்டி யானை, தாய் யானையுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.