கோவை : உடுமலையில் குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளில் உலா வந்து கொண்டிருக்கும் காட்டு யானை சின்னத்தம்பி விவகாரத்தில் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் கையாளும் முறையை கடைபிடிக்க அனுபவ வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த சில தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை வளாகத்தில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்த சின்னத்தம்பி, ஆலை வளாகத்தை விட்டு வெளியேறியது. அதையடுத்து, வனப்பகுதியில் இருந்து 30 கி.மீ தூரமும், ஆலையில் இருந்து 3 கி.மீ தூரமுள்ள, விவசாயி ஒருவரின் கரும்புத் தோட்டத்துக்குள் தஞ்சம் அடைந்தது.
சின்னத்தம்பியை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய யானைகளுடன் சின்னத்தம்பி விளையாடி வந்தது வனத்துறையினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக, சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்திருந்தார். பின்னர், நீதிமன்றத்தில் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளப்படாது என தமிழக அரசு தெரிவித்தது. கும்கியாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், கூண்டில் சின்னத்தம்பி அடைத்து வைக்கப்பட்டு, பாகனின் கட்டுப்பாட்டில் அதன் போக்கை மாற்ற வேண்டியிருந்திருக்கும்.
இந்த நிலையில், காட்டு யானை சின்னத்தம்பி விவகாரத்தில் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் கையாளும் முறையை கடைபிடிக்க யானை குறித்த அனுபவ வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அதாவது, பெரிய வேலி அமைத்து சின்னத்தம்பி சுதந்திரமாக நடமாடவும், அதேவேளையில் வனப்பகுதிகளில் கிடைக்கும் உணவுகளை மட்டும் வழங்கி, அதன் உணவு முறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, இயற்கைக்கான உலகளாவிய நிதிக்கான ஒருங்கிணைப்பாளர் டி. பொம்மிநாதன் கூறுகையில், "பிரச்சனைக்குரிய யானைகளை 'சாஃப்ட் ரிலீஸ்' எனப்படும் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகளில் பெரிய வேலி அமைத்து, அதில் விட வேண்டும். அப்போது, யானைக்கு வனப்பகுதிகளில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். இதன் மூலம், விவசாயப் பயிர்களை உண்டு பழகிய யானைகள், உணவுமுறை மாற்றப்படும்," என்றார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, வரகலியாறில் இருந்து அமராவதி ஆற்றுப் பகுதி வரையில் யாத்திரை மேற்கொண்டுள்ள சின்னத்தம்பி விவகாரத்திலும் இதேமுறையை கையாள வேண்டும் என அவர் கூறினார். இலங்கை, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பிரச்சனைக்குரிய யானைகளை அடக்குவதற்காக இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதனை இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு கேரளாவில் பிரச்சனையை ஏற்படுத்தி வந்த கல்லூர் கொம்பன் என்ற யானையை, கேரள வனத்துறையினர் பிடித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கூண்டில் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம், "வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக வனத்துறை சின்னத்தம்பி யானையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் வரும் ஞாயிறு வரையிலான சின்னத்தம்பி குறித்த தகவல்களையும் கோரியுள்ளது.