பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் பாதுகாப்பு பணிக்காக 2,500 போலீசார் தயார்

திருப்பூர் : வரும் 10-ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையையொட்டி, சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பூர் : வரும் 10-ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையையொட்டி, சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பா.ஜ.க., சார்பில் வரும் 10-ம் தேதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஈட்டிவீரம்பாளையத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஹெலிபேட், அரசு விழாவுக்கான மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 



பிரதமர் மோடியின் வருகையையொட்டி, 3 டி.ஜி.பி., 17 எஸ்.பி. மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களை தணிக்கை செய்யவும், சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என இரு தொலைபேசி எண்ணையும் வழங்கி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...