குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஓழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஓழிப்பு துறை டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி ஆய்வாளர் கீதாலட்சுமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தியது. அப்போது, ஆவண காப்பாளர் நந்தகுமாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 29,000-த்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 



இதில், பணியில் உள்ள 29 ஊழியர்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆடிட்டருக்கு தருவதற்காக தலா ஒருவரிடம் ஆயிரம் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்குண்டான பெயர் பட்டியலையும் அதிகாரிகளிடம் வழங்கியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணைக்குப் பின் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த திடீர் சோதனை காரணமாக அரசு லாலி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...