விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவான அத்திகடவு-அவிநாசி திட்டம் பிப்.,யில் நினைவாகிறது

கோவை : 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு, முதற்கட்டமாக, ரூ. 1,000 கோடி ஒதுக்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அத்திகடவு-அவிநாசி நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை : 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு, முதற்கட்டமாக, ரூ. 1,000 கோடி ஒதுக்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அத்திகடவு-அவிநாசி நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 



அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க ஏரிகள், ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 24,468 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். கொங்கு மண்டல விவசாயிகளின் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், விரைவில் தொடங்க விருக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். 



மொத்தம் ரூ. 1,532 கோடி செலவிலான இந்தத் திட்டம் 34 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும் என அண்மையில் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அத்திகடவு-அவிநாசி நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டக் கூட்டமைப்பைச் சேர்ந்த டி. பிரபு கூறுகையில், "அத்திகடவு-அவினாசி திட்டம் விவசாயிகளின் குறைந்தபட்சம் 50 ஆண்டுகால கனவாகும். ஏற்கனவே குறிப்பிட்டபடி, பழைய திட்ட அறிக்கையின் பேரிலேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகள் அனைவரின் விருப்பமாகும். கடந்த முறை கோவைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2-வது கட்ட திட்டத்தில் பல்வேறு பயன்பாடுகளை முன்வைத்தார். இருப்பினும், பல ஆண்டுகால போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை," என்றார். 

வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கோரப்படுகிறது. ஒப்பந்தத்தை எடுக்கும் ஒப்பந்ததாரர், திட்டத்திற்கான ஒட்டுமொத்தத் தொகையில் இருந்து 1% சதவீதத் தொகையைப் பொதுத்துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை 34 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...