தமிழக அரசின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஐ.சி.சி.ஐ., வரவேற்பு

கோவை : 2019-20-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுபட்ஜெட்டிற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.


கோவை : 2019-20-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுபட்ஜெட்டிற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

தமிழக அரசின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரி இல்லாத நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். எந்தவிதமான புதிய வரியில் இல்லாமல் இடம்பெற்றிருக்கும் இந்த பட்ஜெட்டை அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

* நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 18,700 கோடி ஒதுக்கீடு. 

* வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும். 

* கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ. 5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-4 தரத்திலான பேருந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம்

* கிராமப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக உள்ளாட்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகள் மற்றும் 3,000 இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

* கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு.

* கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 1,200 கோடி ஒதுக்கீடு.

* அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக ரூ. .1000 கோடி ஒதுக்கீடு.

* உணவு மானியத்திற்காக ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு.

* தேனி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதக்கும் சோலார் திட்டத்திற்கு ரூ. 1,150 கோடி ஒதுக்கீடு.

* சுகாதாரத்துறைக்கு ரூ. 12,563.83 கோடியும், எரிசக்தி துறைக்கு ரூ. 18,560 கோடியும் ஒதுக்கீடு.

* தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ், உலக வங்கியின் உதவியுடன் ஏழை மக்கள் மற்றும் தமிழக அரசின் சுகாதார வசதிகளை மேம்படுத்த முடிவு.

* ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கு ரூ. 29,000 ஒதுக்கீடு.

* கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்டம், அறிவித்தபடி வரும் காலங்களில் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாலக்காடு சாலை, தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை மற்றும் அவினாசி சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரிங் ரோடு அமைக்க வேண்டும். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக கருதப்படும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

2019-20 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் சீராகவும், மாநில வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்கிறது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேபோல, தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு கொடிசியா கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...