கோவை : வீடு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளின் வரி உயர்விற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் தாலூகாவிற்கு உட்பட்ட காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, உரிம கட்டணம் உள்ளிட்டவை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்திய கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காரமடை பேருந்து நிலையம் எதிரே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மக்களின் மீது கூடுதல் வரியினை சுமத்தக்கூடாது, உயர்த்திய வரியினை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என முழக்கங்கள் எழுப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காரமடை பேரூராட்சி அலுவகத்திற்கு ஊர்வலமாக சென்று, அங்கிருந்த செயல்அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரில் அளித்தனர்.