திருப்பூரில் பிரதமர் மோடிக்கு வைகோ தலைமையில் 1,000 பேர் கருப்புக் கொடி காட்ட திட்டம்

திருப்பூர் : வரும் 10-ந் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு வைகோ தலைமையில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் : வரும் 10-ந் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு வைகோ தலைமையில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ம.தி.மு.க., சார்பில் திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது, ம.தி.மு.க., அவைச்செயலாளர் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தால் ம.தி.மு.க., கருப்பு கொடி காட்டாது. ஆனால், அரசு நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால்தான் கருப்பு கொடி காட்டுகிறோம். கஜா புயல் பாதிப்பு போன்ற இடர்பாடுகளின் போது ஆறுதல் சொல்லாத, நேரில் பார்வையிடாத பிரதமர் மோடி, தற்போது அரசு நிகழ்ச்சிக்கு வருவதால் தான் கருப்பு கொடி காட்டுகிறோம்.



தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 15,000 கோடி கேட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மோடி பிரதமராக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும், தனி விமானம் மூலம் செல்லலாம். இருப்பினும், கஜா புயலின் போது தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களை பார்வையிட வரவில்லை. 

திருப்பூரில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கப்படும் அரசு சார்ந்த திட்டங்களில் பெரும்பாலான திட்டம் திருப்பூருக்கு சம்பந்தப்பட்டதல்ல. கட்சி நிகழ்ச்சிக்காக வந்தால், அந்த கட்சி சார்பில் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக, அரசு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பிரச்சாரத்திற்காக வருகிறார். கருப்பு கொடி காட்டுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையிலும், திட்டமிட்டபடி திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ம.தி.மு.க. சார்பில் 1,000-க்கும் மேற்பட்டோர் வைகோ தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும். 

பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி காட்டுபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கி அனுப்பி வைக்கப்படும் என பேனர் வைத்தற்கு காவல்துறையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, அதனின் அதிகாரத்தை பல சமயங்களில் மூர்க்கத்தனமாக பிரயோகித்து வருவதை இது காட்டுகிறது, என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...