கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு - மஞ்சூர் சாலையை மேம்படுத்த ரூ. 47 கோடி ஒதுக்கீடு செய்து, மலை கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசு பூர்த்தி செய்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பில்லூர் வனப்பகுதியில் சுமார் 5.000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குண்டூர், முள்ளி, கூடப்பட்டி, கடமான் கொம்பை, அத்திக்கடவு என 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ள இந்த பகுதிக்கு செல்லும் சாலையானது, மிக படுமோசமான நிலையில் குண்டும், குளியுமாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ள இந்த சாலை மேடு, பள்ளங்களாக காட்சியளிப்பதால், இதன் வழியே பேருந்துகள் மட்டுமின்றி இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பில்லூர், குந்தா ஆகிய நீர் மின்நிலையங்களுக்கு அமைந்த பாதுகாக்கப்பட்ட இந்த சாலையை வனத்துறை மற்றும் மின்வாரிய ஊழியர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்படும் போது, இந்த சாலை வழியே மஞ்சூர் சென்று தான் உதகையை சென்றடைய முடியும்.
எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க கடந்த 25 ஆண்டுகளாக இந்தப் பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான சாலையை மேம்படுத்த ரூ. 47 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

வெள்ளியங்காடு முதல் பெரும்பள்ளம் வரை ரூ. 22 கோடியும், பெரும்பள்ளம் முதல் மஞ்சூர் வரை ரூ. 25 கோடியும் நிதி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, அதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இதனால், விரைவில் வெள்ளியங்காடு - மஞ்சூர் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கும் என்பதால் அப்பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.