தமிழக அரசின் 2019-20 பட்ஜெட் : அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.


2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த பட்ஜெட்டின் விபரம் பின்வருமாறு :-

தமிழக தனி நபர் வருமானம் 2017-18 ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 267 ரூபாயாக உயர்வு. தமிழக பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 51.86% ஆக உள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44,176 கோடியாக இருக்கும்,வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.97 லட்சம் கோடியாக இருக்கும். 

தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும். கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு. ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு.

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல். வரும் நிதி ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தியில் சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.57 ஆயிரத்து 600 கோடி செலவு ஏற்படும். வரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும். 

வரும் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு ரூ.2,10,240 கோடியாக இருக்கும். தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக இருக்கும். சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு. வரும் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து மானியமாக சுமார் ரூ.22 ஆயிரம் கோடி கிடைக்கும். 2019-19 ஆம் ஆண்டு கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடியாக இருந்தது. 

தனி நபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. அரசு-தனியார் பங்களிப்பு முறையில், ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். 2 லட்சம் நான்குசக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள்

அரசு-தனியார் பங்களிப்பு முறையில், ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். 

தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும். சொற்பமாக உள்ள நில ஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 2000 கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்தம் இடம் அமைக்கப்படும். 

நிலத்தடியில் 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 4 லட்சம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் திட்டத்திற்கு ரூ.2000 கோடி.

மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும். மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும். கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு.

ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூரில் அடையாற்றில் நீர்தேக்கம். மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும். மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்.

முதல்கட்டமாக, கோவை, மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும். இதன் மூலம், பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான வழிவகை ஒட்டுமொத்த திட்டமிட்ட வளர்ச்சி உறுதிசெய்யப்படும்.

திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும். சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுக் காப்பீடு திட்டம். வீட்டுவசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டுத் துறைக்காக 6,265.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு. புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 

விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு. 

செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ.3,074.84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 

வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு. வரும் நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் புதிதாக பயிர்கள் சேர்க்கப்படும். இடி மின்னல், திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை. பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு. 

ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் நிதியுதவி கோருவதற்கான விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும் ரூ.1361 கோடி ஒதுக்கீடு வரும் நிதி ஆண்டில் 90 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் கொண்ட 2000 பம்பு செட்டுகள் வழங்கப்படும். சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர் மேலாண்மை மேம்படும்.

வரும் நிதி ஆண்டில் மேலும் 5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்கப்படும் ரூ.101.62 கோடி ஒதுக்கீடு ரூ.100 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் உருவாக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது வேளாண் இயந்திரயமமாக்கலுக்காக ரூ.172 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 

128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க உத்தேசம். பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும். வேளாண்மை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு. வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு. 

வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம், ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி. 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். 

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.169.81 கோடி நிதி ஒதுக்கீடு. பாசன மேலாண்மை நவீனமயமாக்குதலுக்கு ரூ.235.02 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு. யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். 2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.  அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். அந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம். வரும் நிதி ஆண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 1656.90 கோடி ஒதுக்கீடு. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 140.11 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு. 

கைத்தறி உதவி திட்டத்துக்கு 40 கோடி ஒதுக்கீடு. விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு. கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1170.56 கோடி ஒதுக்கீடு. பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக ரூ. 726.32கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு. 

மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி

சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க ரூ. 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் அளிக்கப்படும் உள்ளிட்ட பலவற்றை அவர் கூறினார். 

இதனிடயே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...