சமத்துாரில் 5 -வது கொங்குநாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று தொடக்கம்

கோவை : விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் 5 -வது கொங்குநாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று சமத்தூரில் தொடங்கியது.

கோவை : விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் 5 -வது கொங்குநாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று சமத்தூரில் தொடங்கியது.

வானவராயர் ஃபவுண்டேஷன் சார்பில், வருடந்தோறும் நடத்தப்படும் கொங்கு நாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று தொடங்கி அடுத்தடுத்த மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வாக கொடியேற்றத்துடன், வேளாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது. 



இக்கண்காட்சியில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கண்காட்சியை பார்வையிட்ட சின்னவேடம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், விவசாயிகளுக்கும், ஸ்டால்கள் அமைத்துள்ள நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 



இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படும் 'மாதிரி பண்ணை', சங்கர் வானவராயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இன்று மாலை 108 மாடுகள் பங்குபெறும் கோ பூஜை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த திருவிழாவிற்கு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் வருகை தந்துள்ளனர். காங்கேயம் பசு, பல்வேறு இன பசு மாடு, பூச்சிக்காளை, எருது, குதிரை உள்ளிட்ட பல விலங்குகளை ஒரே இடத்தில் பார்வையிடு வாய்ப்பாக இது அவர்களுக்கு அமையும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...