கோவை : வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுற்றுச்சூழல் மற்றும் பறவையியல் ஆர்வலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கோவை : வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுற்றுச்சூழல் மற்றும் பறவையியல் ஆர்வலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தில், வனத்துறை மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம்(World Wide Fund for Nature) ஆகியவை இணைந்து நடத்திய இக்கணெக்கடுப்பு நேற்று தொடங்கியது. அதில், 60 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

இந்த மொத்த கணக்கெடுப்பும் கோவையில் உள்ள 26 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றில் நடத்தப்படுகின்றன. கடந்த வருடம் உக்கடம் மற்றும் வெள்ளலூர் குளங்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி, 166 வகையான நீர்வாழ் மற்றும் அதனோடு தொடர்புடைய பறவைகள் கண்டறியப்பட்டன.
இந்த வருடத்தில், தற்போது வெள்ளலூர் குளத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 80 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வாலையார் நீர்த்தேக்க பகுதிகளில் செய்யப்பட்ட கணக்கெடுப்பில் 50 வகையான பறவைகள் அறியப்பட்டன. இந்த கணக்கெடுப்பு இன்று நிறைவடைகிறது.