கோவை : மக்களுக்கு நல்லதை பரிமாற முற்பட்டுள்ள காரணத்தால் கை அழுக்காகி விடக்கூடாது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை : மக்களுக்கு நல்லதை பரிமாற முற்பட்டுள்ள காரணத்தால் கை அழுக்காகி விடக்கூடாது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமலஹாசன் பேசுகையில், திமுக, அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும்போது யாருடன் கை கோர்க்கிறோம் என்பதை வெகு ஜாக்கிரதையாக ஆராய வேண்டியுள்ளது. அதனால் கூட்டணி எங்கள் கை கரைப்படாத வகையில் தான் அமைக்கப்படும். தனித்து போட்டியிடுவது தொடர்பான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவை மக்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், இஸ்லாமிய திருமண நிகழ்வில் இந்துமத திருமண நடைமுறையை அவமதிக்கும் வகையில் ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, "அது அவர்கள் புதிதாக செய்வதல்ல. எனக்கு பேரதிர்ச்சியை தரவில்லை என்றாலும் கூட அப்படி சொல்லியிருக்க வேண்டாம். அதுவே, பண்பு என்பது எனது கருத்து," என பதிலளித்தார்.