நீலகிரியில் வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி : வனவிலங்குகளுக்காக சிறப்பு ஏற்பாடு

நீலகிரி : நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி : நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



நீலகிரி மாவட்டம், கூடலூர், முதுமலை, சீகூர் போன்ற பகுதிகளில் உள்ள வனங்களில் புற்கள் கருகி வருகிறது. இந்நிலையில், யானைகள் முதலிய வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. எனவே, வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, வனப்பகுதிளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து, தீ தடுப்பு காவலர்களை நியமிப்பது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 



இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் தண்ணீருக்காக வெளியில் வராமல் இருக்க இங்குள்ள வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இருமாதங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ளதாலும், மனித - விலங்கு மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் இது போன்ற தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



மேலும், வறட்சி காலம் முடியும் வரை இந்த தண்ணீர் நிரப்பும் பணி தொடரும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...