திருப்பூரில் 14 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஆய்வு

திருப்பூர் : திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் வசித்து தேங்காய் களத்தில் பணியாற்றி வந்த 13 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது உறவினருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, அவர்கள் ஊத்துக்குளி பகுதிக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 



இதையடுத்து, மருத்துவர்கள் 14 வயதேயான சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவலை குழந்தை பாதுகாப்பு அமைப்பினருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இன்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அலுவலர் நேரில் வந்து சிறுமியையும், குழந்தையையும் பார்வையிட்டனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது ;- ஒரு குழந்தைக்கே, குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையை வளர்க்க சிறுமி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியானவரா என ஆய்வு மேற்கொள்ளப்படும். ஒருவேளை தகுதியற்றவர் என தெரியும் பட்சத்தில் குழந்தையை அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்ப்போம். 

மேலும், சிறுமிக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். குறிப்பாக, குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...