திருப்பூர் : திருப்பூர் அருகே வாகன சோதனையின் போது 3000க்கும் மேற்பட்ட போலி மது பாட்டில்களையும், ஈச்சர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. உடனடியாக, போலீசார் அதனை பின் தொடர்ந்து துரத்தி பிடித்தனர். இதையடுத்து, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.
தொடர்ந்து போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 3136 போலி மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் உடனடியாக மது விலக்கு போலீசாருக்கு அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மது விலக்கு போலீசார் வாகனத்தில் இருந்த ஆவணங்களின் உதவியுடன், பாலசமுத்திரம் பகுதியில் கோழிப்பண்ணையில் போலி மதுபான ஆலை இயங்கி வருவதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த காலி மது பாட்டில்கள் மற்றும் லேபிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் லோகேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதில், 3136 போலி மது பாட்டில்களையும், ஈச்சர் வாகனத்தையும் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.