உதகையில் விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்

நீலகிரி : உதகையில் உரிய அனுமதியின்றியும், விதிமுறைகள் மீறியும் கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கும், கட்டடங்களுக்கும் சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

நீலகிரி : உதகையில் உரிய அனுமதியின்றியும், விதிமுறைகள் மீறியும் கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கும், கட்டடங்களுக்கும் சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 



நீலகிரி மாவட்டம், உதகையில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உரிய அனுமதியின்றி விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.

மேலும், அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வந்தனர். ஆனாலும், நோட்டீஸ் பெற்ற சில உரிமையாளர்கள் கட்டடங்கள் கட்டுமானப் பணியை நிறுத்தியும், சிலர் நோட்டீஸிற்கு பதிலளிக்காமலும், இன்னும் சிலர் கட்டுமானப்பணிகளை தொடர்ந்தும் வருகின்றனர். 

இந்நிலையில், இன்று விதிமுறை மீறிய வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக உரிய அனுமதி பெறாத கட்டட உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...