மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை : சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்துறை சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை : சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்துறை சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தின் நகர முக்கிய வீதிகள் வழியே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 



பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறை, வாடகை வாகன ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இப்பேரணியை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 

இப்பேரணியில், ஹெல்மெட் போடுவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், வாகனம் ஓட்டும் போது கைப்பேசியினை பயன்படுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் நகர எல்லையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகளை வழியே சென்று இறுதியில் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.  

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...