கோவை வழியாக ஹவாலா பணத்தைக் கடத்திய கும்பல் கைது : ரூ.2.5 கோடி பணம் பறிமுதல்

கோவை : கோவை வழியாக கேரளாவுக்கு, கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி ஹவாலா பணத்தை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனோடு கடத்திய 5 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை வழியாக கேரளாவுக்கு, கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி ஹவாலா பணத்தை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனோடு கடத்திய 5 நபர்களும் கைது செய்யப்பட்டனர். 

கோவையை அடுத்த பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஒரு கும்பல் ஹவாலா பணத்தை கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பாலக்காடு ரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர் கொண்ட கும்பலை போலீசார்கள் விசாரித்தனர். 

இந்த விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அதையடுத்து, சந்தேகத்துக்கிடமான நபர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில், அவர்கள் உடம்பில் பெல்ட் அணிந்து ரூ.2 ஆயிரம், ரூ.500 என்று கட்டு கட்டாக பணம் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, முழுமையான சோதனையில் ரூ.2.5 கோடி பணத்தை பறி முதல் செய்தனர். 



மேலும், இதில் ஒருவர் கேரளா மாநிலம் பாலக்காடு என்பதும், இரண்டு நபர்கள் கொல்லம் என்பதும் மற்ற இருவரும் மகாராஷ்டிரா என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பாலக்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...