பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க திருப்பூர் எம்.பி மக்களவையில் கோரிக்கை

திருப்பூர் : பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும், கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும் குறைக்கக் கோரி மக்களவையில் விவாதத்தில் கலந்துகொண்ட திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா வேண்டுகோள் விடுத்தார்.


திருப்பூர் : பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும், கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும் குறைக்கக் கோரி மக்களவையில் விவாதத்தில் கலந்துகொண்ட திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா வேண்டுகோள் விடுத்தார். 

மக்களவையில் அவர் பேசியதாவது :- உலகின் முதலாவது பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டம், திருப்பூரிலுள்ள 18% பொது சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, மறுசுழற்சி முறையில் தினமும் சுமார் 10 கோடி லிட்டர் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. 

மீண்டும், அந்த நீர் சாய ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. 3வது குடிநீர் திட்டம் மூலமாக சாய ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 9 கோடி லிட்டர் தண்ணீர், பொதுமக்களின் அதிகப்படியான பயன்பாட்டுக்காக தினமும் வழங்கப்பட்டு வருகிறது. 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அற்புதமான இத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து ஊக்குவிக்கின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 300 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

 மொத்தமுள்ள சாய ஆலைகளில், 100 ஆலைகள் தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டு இயங்குகிறது. இத்தகைய தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அளிக்கப்படுவது போன்று 12% ஜி.எஸ்.டி வரி அமலாக்கப்படவில்லை. 

இதனால், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் கீழ் இயங்கும் ஆலைகள் மற்ற ஆலைகளை விட 2% அதிக விலை நிர்ணயிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மேலும், போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு ஆடைகளின் விலை சுமார் 4 சதவீதம் அதிகமாக உள்ளது. 

இதனை சமாளிக்க வேண்டுமென்றால், பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகக் குறைக்க வேண்டும். 

மேலும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகக் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எம்.பி சத்தியபாமா கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...