பள்ளியின் பெயரை கலங்கப்படுத்த வாட்ஸ்அப் மூலம் தவறான செய்தி; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் தகவல்

கோவை : காரமடை அருகே உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியின் மீது சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டுகளை, அவதூறு எனக் கூறிய பள்ளி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


கோவை : காரமடை அருகே உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியின் மீது சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டுகளை, அவதூறு எனக் கூறிய பள்ளி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 



கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது வித்யா விகாஸ் பள்ளி. இந்த பள்ளியின் ஓட்டுநர் நிஜாமுதின் என்பவர் கடந்த திங்கள் அன்று பள்ளி வாகனத்தை எடுத்து கொண்டு பெரியநாயக்கன்பாளையம் வழியில் குழந்தைகளை அழைத்து வர சென்றுள்ளார். 

இதையடுத்து, சாமிசெட்டிப்பாளையத்திற்கு அருகில் செல்லுகையில், ஓட்டுநர் மது அருந்தியதாகக் கூறி பெற்றோர்கள் பள்ளி பேருந்தினை சிறை பிடித்தனர். அதை தொடர்ந்து அந்த ஓட்டுநரை பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் அடிப்படையில், அவரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், அவரது உடலில் ஆல்கஹால் ஏதும் இல்லை என தெரியவந்தது. ஆனால், விசாரணையில் ஓட்டுநர் ஒரு நாள் முன்னதாக மது அருந்திய வாடை வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் புகார் தெரிவிக்க சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையல், நடந்த இந்த சம்பவங்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். 

கடந்த திங்கள் அன்று நடைபெற்ற இந்த நிகழ்வுகளை, தற்போது நடந்தது போல் தொடர்ந்து பகிர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், பள்ளியின் பெயரை கெடுப்பதற்கென சிலர் திட்டமிட்டே செயல்படுகின்றனர். மேலும், இதுகுறித்து புகார் தெரிவிக்க உள்ளதாகவும், மீண்டும் மீண்டும் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, இதே பள்ளியில் கடந்த 1ம் தேதி எல்.கே.ஜி., பயிலும் 4 வயது பெண் குழந்தைக்கு, பள்ளியின் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவர் பாலியல் தொந்தரவு அளித்தாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும், குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...