உதகையில் 2 நாளுக்கு மேலாக உலா வந்த காட்டு யானைகள் : தானாகவே வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தகவல்

நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு, நெல்லிக்கம்பை கிராமங்களில் 2 நாளுக்கு மேலாக உலா வந்த இரண்டு யானைகள் ஆணிக்கல் மாயார் வழியாக சிறியூர் வனப் பகுதிக்குள் தானாகவே சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு, நெல்லிக்கம்பை கிராமங்களில் 2 நாளுக்கு மேலாக உலா வந்த இரண்டு யானைகள் ஆணிக்கல் மாயார் வழியாக சிறியூர் வனப் பகுதிக்குள் தானாகவே சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம், உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு,நெல்லிக்கம்பை கிராமங்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் இப்பகுதி விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து வனத் துறையினர் யானைகளைக் கண்காணிக்கும் பணியி்ல் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில், குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த இந்த யானைகள் தானாக ஆணிக்கல்,மாயார் வழியாக, சிறியூர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வழக்கமாக தோட்டபணிகளுக்கு சென்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...