நீலகிரி : நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு, பிப்ரவரி மாதத்திற்கான விலையை தென்னிந்திய தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. தேயிலை உற்பத்தி செய்யும், தொழிற்சாலைகளில் இருந்து விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனை தேயிலை வாரியம் சார்பில் மாதத்தில் முதல் வாரம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்த மாத விலையினை குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
தேயிலை வாரிய உதவி இயக்குனர் ஹரிபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;- நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஏலத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, ஜனவரி மாத ஏலத்தின் அடிப்படையில், பிப்ரவரி மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு, ரூ.15.87 காசு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்குவதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட விலை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து தேயிலை வாரியத்திற்கு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் ஹரிபிரகாஷ் கூறியுள்ளார்.