உடுமலையிலிருந்து சின்னத்தம்பியை விரைந்து அப்புறப்படுத்தக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருப்பூர் : உடுமலை அருகே சின்னதம்பியை பிடித்து செல்ல கோரி 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.


திருப்பூர் : உடுமலை அருகே சின்னதம்பியை பிடித்து செல்ல கோரி 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர். 



திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் கடந்த 5 நட்களாக சின்னதம்பி சுற்றி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் அங்கிருந்து செங்கழனிபுதூா் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள கரும்பு, நெல் ஆகிய பயிர்களை சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்தனர்.



இந்த சம்பவத்தை தொடர்ந்து, சின்னதம்பியை பிடித்து செல்ல வலியுறுத்தி கிருஷ்ணாபுரத்தில் 100 -க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தால், கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வரும் வரை சின்னதம்பியை பிடிக்க முடியாது என வனத்துறையினர், விவசாயிகளிடம் தெரிவித்தனர். 

இதனிடையே, கடந்த 5 நாட்களாக எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் சுற்றி வந்த சின்னதம்பி, அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாகம், அங்கிருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்ததையொட்டி, அந்த பகுதிக்குள் செல்ல நேற்று முதல் மறுத்து வந்தது. மேலும், இன்று விவசாய நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் சின்னதம்பியை பிடித்து செல்லக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...