கோவை : ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வினா, விடை புத்தகங்களையும், விலையில்லா மிதிவண்டிகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 520 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 396 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 215 பேருக்கும் ஆகமொத்தம் 1,131 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், வினா, விடை புத்தகங்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது :- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் உயர்வுக்காக விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினிகள், நோட்டுப்புத்தகங்கள், காலணிகள், வண்ணச்சீருடைகள் போன்ற அடுக்கடுக்கான நலத்திட்டங்களை வழங்கி இந்தியாவிலேயே தமிழகத்தில் முன்னோடி மாநிலமாக திகழச் செய்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, இத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மாநகர கல்வி அலுவலர் (பொ) ஆர்.ரவி, ஆலயம் அறக்கட்டளை பொறியாளர் சந்திரசேகர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சதீஸ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.