நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரிமுடக்கு கிராமங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலா வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரிமுடக்கு கிராமங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலா வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வனங்களில் உள்ள விலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலா வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உதகை அருகே கெந்தொரை கிராமத்திலுள்ள கரி முடக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்புக இருகாட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகளை இரவு நேரத்தில் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் விவசாயப் பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் யானைகள் உள்ள இடத்தைக் கண்டறிந்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.