நீலகிரி : உதகை நகராட்சிக்கு உட்பட்ட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கடைளை அளந்து முறைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

உதகை நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் இடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கான வாடகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள நிலையில், இன்று திடீரென வந்த நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட கடைகளை அளவிட தொடங்கினார். இந்தக் கடைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எவ்வளவு அதிகம் கட்டப்பட்டுள்ளதோ அதற்கேற்றாற் போல வாடகை நிர்ணயிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, கடைகளை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளை முறையாக அளக்காமல், அதிகஅளவு இருப்பதாக கணக்கு காட்டி, கூடுதல் வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இதனால், நகராட்சி ஊழியர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு முறையாக அளந்து உரிய அளவினை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டுமென நகராட்சி ஊழியர்களிடம் கடை உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு முறையாக அளக்கப்பட்டது. இப்பணிகள் நாளையும் நடக்கும் என்று நகராட்சி அதிகாரிகள்
தெரிவித்தனர்.