கோவை : உரப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் ’மண்வள அட்டை’ கோவையில் 53,114 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

விளைநிலங்களில் தொடர்ந்து பயிர்சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்துக் குறைபாடுகளைச் சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய வேண்டியது அவசியமாகும். சத்துகளின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மாறுபடுவதாலும் பயிருக்கு ஏற்ப சரியான உரத்தை தேர்வு செய்வது சிக்கலாக உள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் அதிக அளவிலான உரங்களை உபயோகித்து மண்ணின் தரத்தை குறைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மண்ணின் தரத்தை பாழாக்கும் செயற்கை உரங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், பயிர் விளைச்சலுக்கான மண்சத்துக்களை அதிகரிக்கவும், மத்திய அரசு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு மண்வள அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மண் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படும் இந்த மண்வள அட்டையின் உதவியோடு, தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால், குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறுவதோடு, அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம் என வேளாண் அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ''விளைநிலங்களுக்குத் தேவையான சத்துள்ள உரங்கள், பயிரிட வேண்டிய பயிர்கள், ஒவ்வாத பயிர்கள், பாசன மாதிரி, உப்பு அளவு, மண் மேலாண்மை, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்துகொண்டு, உரப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் ’மண்வள அட்டை’, கோவையில் இம்மாதத்திற்குள் 53,114 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. சூலுார் கே.மாதப்பூர், காரமடை நெல்லித்துறை, பொள்ளாச்சி தெற்கு எஸ்.பொன்னாபுரம் ஆகிய மூன்று கிராமங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, மண்வள அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மண்வள அட்டையில் உள்ள பரிந்துரைகளின்படி மட்டுமே உரம் வழங்கப்படுகிறது. 2018-19-ம் ஆண்டில், கோவையில் உள்ள 12 வட்டாரங்களில் 26,593 மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 53,114 விவசாயிகளுக்கு மண்வள அட்டை ஒரு மாதத்தில் வழங்க உள்ளோம். இதனால், உரத்தை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும்,'' என்றனர்.

மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவைக்கு அதிகமான உரமிடுதலின் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு அடைவதோடு, அதிக வருவாய் தரக்கூடிய பயிர்களைத் தேர்வு செய்து, தொழில் முன்னேற்றம் காண முடியும் எனவும் கூறப்படுகிறது.