கோவை : மேட்டுப்பாளையத்தில் இயற்கை சீற்றத்தால் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமான நிலையில், ஏல மையங்களில் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இதனால், வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயமே முதன்மையான வாழ்வாதார தொழிலாக உள்ளது. இங்கு பயிரிடப்படும் நேந்திரன், ரொபஸ்டா, செவ்வாழை, கதிலி உள்ளிட்ட பழவகைகளுக்கு, இதன் தரம் மற்றும் சுவை காரணமாக வரவேற்பு அதிகம். இதன் காரணமாக, இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழகத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் பவானியாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 9,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் நீரில் மூழ்கி சேதமானது. மேலும், அவ்வப்போது வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கியும் வாழைமரங்கள் முறிந்து போனது. இதனால், இப்பகுதி வாழை விவசாயமே சுமார்60 சதவிகிதம் வரை அழிந்து போனது.
இயற்கை சீற்றங்களினால் வாழைத்தார் அறுவடை சரிந்த விட்டதால், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் வாழைத்தார் ஏல விற்பனை மையங்களுக்கு வரத்து பெருமளவு குறைந்து விட்டது. இதன் காரணமாக, வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, செவ்வாழை விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. இதனால், உள்ளூர் மற்றும் வெளிமாநில மொத்த வியாபாரிகள் இவற்றை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பு மற்றும் சபரிமலை விவகாரத்தால் அங்கிருந்து வரும் வாழை வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து, விற்பனையும் சரிந்துள்ளது. இதனால், கேரளத்தில் அதிகம் தேவையுள்ள நேந்திரன் தார் விலை குறைந்து விட்டது. இந்த விலை உயர்வு சாகுபடி பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கும் பலனில்லாத சூழலே நிலவுகிறது.