கோவை கொடிசியாவில் தொழிற்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா : முதல்வர் தொடங்கி வைத்தார்

கோவை : தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கோவை கொடிசியாவில் அமைக்கவிருக்கும் இரண்டு தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டுவிழானை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.



கோவை : தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கோவை கொடிசியாவில் அமைக்கவிருக்கும் இரண்டு தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டுவிழானை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். 



கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கொடிசியா தொழிற்பூங்கா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் புதிய தொழில்களுக்கு வாய்ப்பையும், ராணுவ தளவாட தொழில் போன்ற திட்டங்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதன்படி, தொழில் பூங்காவானது கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியில் 235 ஏக்கர் பரப்பளவிலும், கள்ளப்பாளையம் பகுதியில் 140 ஏக்கர் பரப்பளவிலும் என இரண்டு இடங்களில் சுமார் 375 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. 

இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ;- 50 வருடங்களுக்கு முன்பு 40 உறுப்பினர்களுடன் தொழில்துறையின் வளர்ச்சிக்காக கொடிசியா தொடங்கப்பட்டது. கோவையில் மெட்ரோ ரயில் விடும் திட்டம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. டி.ஐ.பி.ஆர் இன்னும் ஒரு வருடத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பொள்ளாச்சி - பாலக்காடு சாலை 2020ம் ஆண்டுக்குள் இணைக்கப்படும். சி.ஐ.பி.எல் மேம்பாட்டுக்காக 3000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் அரசியலை நுழைக்காதீர்கள், எங்கள் அரசில் உள்ள அமைச்சர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்பிலும், சிறு,குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சியில் உதவுவார்கள்,"என்றார். 



இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



இந்நிகழ்வில் கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது : கோவையில் தொழிற் பூங்கா அமைய இருப்பது வரலாற்றில் முக்கிய பங்காகும். இதனால், நேரிடையாகவும், மறைமுகமாக ஏராளமானோர் பயன் அடைவர். இந்த தொழிற் பூங்கா அமைவதால் ராணுவ தளவாட இறக்குமதிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மத்திய மாநில அரசுகளின் உதவியோடு நவீன மையம் தொழிற்கட்சி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜாப் ஆர்ட்ர் செய்பவர்களை 5% ஜி.எஸ்டி க்குள் கொண்டு வரவேண்டும். தொழில் துறையினர் மும்பை,டெல்லிக்கு அடிக்கடி சென்று வருவதால் விமான சேவையை அதிகரிக்க வேண்டும். பெண்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு 5% அதிக முதலீட்டு மானியம் வழங்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து பேசிய, சி.ஐ.பி.ல் தலைவர் ஏ.வி.வரதராஜன், சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த தொழிற்பூங்கா அமைய நிறை இடையூறுகள் இருந்தது. அதனைத் தாண்டி இது அமையப் பெற்றது என கூறினார். 



இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "இந்த தொழிற்பூங்கா நிகழ்வில் பாதுகாப்பு துறை அமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த தொழிற்பூங்கா அமைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உதவி உள்ளார். தமிழக முதல்வர் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். 



மேலும், இந்த உலக முதலீட்டார் மாநாடு மூலம் பத்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 50 கோடி முதலீட்டில் இந்த தொழிற்பூங்கா அமைவதால் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த பூங்கா அமைய பாடுபட்ட கொடிசியா அமைப்பினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்," என்றார். 

"தொழிற்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஒற்றை சாளர முறை திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளதால் தொழில் துறையினர் தொழில் தொடங்க உடனடியாக அனுமதி கிடைக்கிறது. சென்னைக்கு அடுத்த படியாக கோவை சிறந்த தொழில் மாவட்டம் ஆக இருக்க கொடிசியா பங்கு மிகவும் முக்கியமானது. இதனை மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும், என தொழிற்துறை அமைச்சர் சம்பத் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...