காயங்களுடன் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் அடைப்பு : வனத்துறையினர் சிகிச்சை

நீலகிரி : கூடலூர் அருகே நேற்று வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்த பின், வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத்துறை குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி : கூடலூர் அருகே நேற்று வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்த பின், வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத்துறை குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 



நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாட்டவயல், கைவட்ட பகுதியை சேர்ந்தவர் ராயின். இவரது வீட்டிற்குள் நேற்று 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை புகுந்து அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டது. இதன் உடம்பில் அதிக காயங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும், உணவு உண்ணாமல் இருந்ததால் அதிக சோர்வுடன் காணப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்தனர். மேலும், அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அதற்கு உணவு அளித்த வன ஊழியர்கள், தற்போது அதன் உடம்பில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 

மேலும், சிகிச்சை முடிந்தபின் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த சிறுத்தையை கொண்டு சென்று விடப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...