நீலகிரி : இருபது ஆண்டுகளுக்குப் பின் உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு கிராமங்களில் மீண்டும் யானைகள் உலா வருவதாக விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. வனங்களில் உள்ள விலங்குகள், அவ்வப்போது விளை நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இருபது ஆண்டுகளுக்குப் பின் உதகை அருகே கெந்தொரை பகுதியிலுள்ள கரி முடக்கு என்னும் இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக 2 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகளை இரவு நேரத்தில் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் யானைகள் உள்ள இடத்தைக் கண்காணித்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தேயிலை தோட்டங்களிலும், விளை நிலங்களிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால் இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.