கோவை நட்சத்திர ஓட்டலில் நகை கொள்ளை சம்பவம் : வடமாநில கும்பலை பிடிக்க மகாராஷ்டிரா, கர்நாடகாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார்

கோவை: கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து நகைகளை திருடி தப்பிச்சென்ற வடமாநில கும்பலை பிடிக்க கோவை மாநகர தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து நகைகளை திருடி தப்பிச்சென்ற வடமாநில கும்பலை பிடிக்க கோவை மாநகர தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சந்திப்புக்கு அருகே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 1ம் தேதி முதல் நகைக் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான அரங்குகளில் புதிய வடிவங்களில் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கண்காட்சிக்கு 4 பெண்கள் உட்பட 6 பேர் வந்து ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டனர். அப்போது, இவர்களில் ஓர் ஆண், 2 பெண்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பினர். 



இதையடுத்து, மற்றொரு ஆணும், 2 பெண்களும் ஓர் அரங்கிற்குள் நுழைந்து, அங்கிருந்த நகைகளைப் பார்வையிட்டனர். அங்கிருந்த விற்பனையாளரிடம், பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த நகைகளின் விலை குறித்து கேட்டனர். அதற்கு விற்பனையாளர் பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் பெண் விற்பனையாளருக்குத் தெரியாமல், அங்கு வைக்கப்பட்ட 24 பவுன் தங்க நகையை திருடி, அருகேயிருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். 



அதைத் தொடர்ந்து, நகைகளை பிறகு வந்து வாங்குவதாக கூறிவிட்டு இவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை செய்ததில் கொள்ளை கும்பல் குழுவினர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதியானது.

இதையடுத்து வட மாநிலத்தைச் சேர்ந்த அந்த கும்பலை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பந்தய சாலை காவல் நிலைய குற்றவியல் ஆய்வாளர் மோகன் ராஜ், உதவி ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனிப்படையில் ஒரு தனிப்படை மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்றொன்று கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...