முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருகை : பாதுகாப்பிற்காக 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கோவை : விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருதையொட்டி, 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.


கோவை : விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருதையொட்டி, 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார். நாளை காலை 7.20 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், விமான நிலையத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியின் இல்லத்திற்கு காரில் செல்கிறார். பின்னர், காலை 10 மணி அளவில் வையம்பாளையத்தில் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். 

தொடர்ந்து, நீலாம்பூர் அருகே உள்ள முதலிபாளையத்தில் பேரூர் சாந்தலிங்கர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, கருமத்தம்பட்டி அருகே உள்ள தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு விமானம் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னை செல்கிறார். 

கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சரின் வருகையையொட்டி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் ஆகியோரின் உத்தரவின்பேரில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...