கோவை : எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான பேரணி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கடந்த 3-ம் தேதி காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியின் மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் கே. நடராஜன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சித்ரா ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்தப் பேரணியில் என்.சி.சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றவர்கள் சென்றனர்.