திருப்பூர் : காட்டு யானை சின்னத்தம்பிக்கு ஆதரவாக கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் தன்னார்வலர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.
திருப்பூர் : காட்டு யானை சின்னத்தம்பிக்கு ஆதரவாக கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் தன்னார்வலர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தன்னார்வலர்கள் சின்னத்தம்பி காட்டு யானைக்கு ஆதரவாக 'சேவ் சின்னத்தம்பி' என ஹேஸ் டேக் இட்டு பேனர்கள் வைத்துள்ளனர். இந்த பேனரில் 'மனிதர்கள் செய்யும் குற்றத்திற்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா..? சின்னத்தம்பியை வாழ விடுங்கள், காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்… காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்..' என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேனரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வதுடன், சின்னத்தம்பிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, உரிய அனுமதி இன்றியும், அமைப்பின் பெயர் பதிவிடப்படாமலும் பேனர் வைக்கப்பட்டிருப்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.