கோவை : அரசின் உத்தரவையும் மீறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை கல்வித்துறையின் இணையளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கான 21 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் என 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே, அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசின் எச்சரிக்கைக்குப் பிறகு, கொடுத்த நேரத்தில் பணியில் சேர்ந்த பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் வெளியிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியப் பிடித்தம் மற்றும் உயர் பதவி வழங்குவது நிறுத்தப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பெயர்கள் மற்றும் விபரம் பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 19 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.