நீலகிரி : முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால், கூடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கூடலூர் அருகே பாட்டவயல் கைவட்டப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, கட்டிலுக்கு அடியில் படுத்து இருந்துள்ளது. இதனையறியாமல் வீட்டில் இருந்தவர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில், கட்டிலுக்கு அடியில் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, சிறுத்தை இருப்பதை அறிந்துள்ளனர். இதையடுத்து, வீட்டு உரிமையாளர் கதவை பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார். தற்சமயம் சிறுத்தை கட்டிலுக்கு அடியில் பதுங்கி உள்ளது.

முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால், வீட்டிற்குள் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உதகையில் உள்ள வனக் கால்நடை மருத்துவர் மனோகரன், சின்னத்தம்பி யானையைக் கண்காணிக்க உடுமலை சென்றுள்ளதால், வீட்டினுள் உள்ள சிறுத்தையைப் பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.