மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த ராஜநாகம் பிடிபட்டது

கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே சுற்றித்திரிந்த அரியவகை பாம்பினமான ராஜநாகம் பிடிபட்டது.


கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே சுற்றித்திரிந்த அரியவகை பாம்பினமான ராஜநாகம் பிடிபட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துரை அருகே உள்ள புளியமரம் என்ற குடியிருப்பு பகுதிகள் ராஜநாகம் ஒன்று சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் பாம்பு பிடி வீரர்களுடன் சென்ற வனத்துறையினர், அங்கு குடியிருப்பு அருகே ஒரு புதரில் மறைந்திருந்த 16 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை பத்திரமாக பிடித்தனர்.



பிடிபட்ட ராஜநாகம் பெண் இனத்தை சார்ந்தது என்றும், பொதுவாக நீர் நிலைகளை ஒட்டியே வாழக்கூடிய இந்த வகை பாம்புகள், கல்லார் பகுதியில் குளிர் சீதோசநிலை உள்ளதால் இங்கு வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து, பத்திரமாக மீட்கப்பட்ட இந்த ராஜநாகம் கல்லாருக்கு மேல் பகுதியில் உள்ள பர்லியாறு அருகே அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இனிவரும் காலங்களில் வறட்சி ஏற்படும் சூழலில் பாம்புகள் வெளியேறும். எனவே, பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...