திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை, மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும் என மக்களவையில் திருப்பூர் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மக்களவையில் அவர் பேசியதாவது :- திருப்பூர் பி.எப்., அலுவலகம், திருப்பூர், பல்லடம், காங்கயம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளை உள்ளடக்கி இயங்குகிறது. 3.500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 2.25 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், பி.எஃப்., சந்தாதாரர்களாக உள்ளனர்.
ஜீவன் பிரமாண் பத்திரம் பெற கடந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓய்வூதியர்களை பதிவு செய்தது திருப்பூர் அலுவலகம். ஆதாரில் திருத்தம் செய்வது, புதிய ஆதார் பெறுவதற்காக, உதவி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. பி.எப்., நிறுவன நாள் விழாவில் 2018-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட அலுவலகம் என்கிற விருது திருப்பூர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது. தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விரிவான அலுவலகம், கூடுதல் அதிகாரம் தேவைப்படுகிறது.
எனவே, ஏழை ஊழியர்களுக்கு சேவை புரியவும் சமூகத்தின் நல்லிணக்கத்தை கொண்டு வரவும், இந்த திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு வலியுறுத்தினார்.
முன்னதாக, நேற்று இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் (தனிபொறுப்பு) சந்தோஷ் குமார் கங்க்வாரை திருப்பூர் எம்.பி சத்தியபாமா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.