கோவை : இந்தியாவில் உள்ள 101 முக்கிய வழித்தடங்களில் 5 வழித்தடங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிந்த நிலையில், மீதமுள்ள 96 வழித்தடங்களைக் காக்க இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளை (WTI) ரூ.164 கோடி செலவில் நடவடிக்கை மேற்கொள்கிறது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கை உடையவை ஆசிய யானைகள். இந்நிலையில், அதனுடைய வாழ்விடம் துண்டாடப்படும் காரணத்தால் அவை குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. இந்த மனித - விலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்த வனவிலங்கு அறக்கட்டளை, பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், 12.9 சதம் மட்டுமே காட்டுக்குள் அமைந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், உத்திரகாண்ட், அசாம், மேகாலயா, அருணாச்சலபிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் தான் 101 வழித்தடங்கள் பரவியுள்ளது.
கடந்த 12 வருடங்களில், மேற்சொன்ன 101 வழித்தடங்களில், மேகாலயா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள 5 வழித்தடத்தை முழுமையாக மீட்டெடுத்துள்ளது, வனவிலங்கு அறக்கட்டளை. மேலும், ஆறாவது வழித்தடத்தை கைப்பற்றி மீட்கும் பணிகள் அசாம் மற்றும் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்திய வனவிலங்கு அறக்கட்டளை, ஏசியன் எலிபேண்ட் அலையன்ஸ் மெம்பர்ஸுடன் இணைந்து செய்து வருகிறது. எலிபேண்ட் பேமிலி, இன்டர்நேஷனல் பண்ட் ஃபார் அனிமல் வெல்பேர் (IFAW), உள்ளிட்ட சில அமைப்புகளோடு இப்பணிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு அமைப்பும், இதில் ஈடுபட்டுள்ளது.
“2005ம் ஆண்டில் நடத்திய முதற்கட்ட ஆய்வில், 88 வழித்தடங்கள் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன. 2017-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, புதிய 20 வழித்தடங்களுடன் 101 வழித்தடங்கள் கண்டறிப்பட்டன. அதில், 7 வழித்தடங்கள் உத்திரகாண்ட் மற்றும் ஆந்திராவில் இருப்பதாக வெளிக்கொணரப்பட்டது. மேலும், இந்த கணக்கெடுப்பானது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும். இதனால், யானைகளின் புதிய வழித்தடங்களை கண்டறிய முடியும், என்கிறார் மேலாளர் மற்றும் யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கும் திட்டத்தின் தலைவர் கே.ராம்குமார் (வட இந்தியா).

மேலும் அவர் சிம்ப்ளிசிட்டியிடம் பேசுகையில்,”வழித்தடத்தை கண்டறியும் போது, நாங்கள் 4 வகையான மாதிரிகளை அந்தந்த இடத்தில் செயல்படுத்துவோம். அவை, பிரைவேட் பர்சைஸ் மாடல் (Private Purchase Model), கம்பியூனிட்டி செக்யூர்மெண்ட் மாடல் (Community Securement Model), கவர்மெண்ட் அக்யூசெஷன் மாடல் (Government Acquisition Model), பப்ளிக் செக்யூர்மெண்ட் மாடல் (Public Securement Model) ஆகியவை ஆகும். இந்த வழித்தடத்தை பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அப்புறப்படுத்தப்படும் பூர்வீக மக்களை அரசு அதன்பின் கவனித்துக் கொள்ளும்.
அந்த மறுவாழ்வு நடவடிக்கையில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வரை அரசு பொறுப்பேற்று கொள்ளும். இது தொடர்பான மாநில ஆலோசனைக்கூட்டம் 12 மாநிலங்களிலும், வழித்தடங்கள் குறித்த அதிகாரிகளின் விளக்கங்களோடு நடைபெறும்” என்றார்.
வழித்தடங்களை மீட்டெடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ராம் குமார் விளக்கும் போது, அந்த வழித்தடத்தின் அருகிலோ அல்லது அந்த இடத்திலோ வாழும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமான ஒன்றாகும். மேகாலயா போன்ற வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரிடம், யானைகளின் வழித்தடத்தை இடையூறு செய்ய வேண்டாம் என நடத்திய சமாதான பேச்சுவார்த்தை அதுபோன்ற சவால்தான்.
“மேகாலயாவில் வசிக்கும் பழங்குடிகள் செய்யும் விவசாய முறைகளால் (Jhum Cultivation), அழிக்கப்படும் மரங்களை நிறுத்தச் சொல்லி விளக்கினோம். அவர்களின் கட்டுப்பாட்டில் அவ்விடம் இருக்கும் பட்சத்திலும், அதனை கட்டுமானப்பணிகளுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினோம், “ என விளக்கினார்.

தமிழ்நாட்டிலுள்ள வழித்தடங்கள் :
“இந்தியா முழுக்க பார்க்கையில், தமிழ்நாட்டில் தான் அதிக வழித்தடங்கள் அமைந்திருக்கின்றன. கிட்டதட்ட 16 வழித்தடங்கள், இரண்டு மாநிலங்களுடன் இணைந்த நிலையில் அமைந்துள்ளன. கர்நாடகா மற்றும் கேரள வன எல்லைகளுடன் பிணைந்திருக்கும் இந்த வழித்தடங்களை மீட்டெடுப்பதென்பது பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது சுமுகமாக முடிய வாய்ப்புள்ளது. 16 வழித்தடங்களில் 35 சதவீதம் காடுகளுக்குள் அமைந்திருப்பது மீட்பு நடவடிக்கையில் கவனித்தக்கது, “என்றார் ராம்குமார்.