நீலகிரி : குன்னூர் பேருந்து நிலைய முக்கிய சாலையில் இன்று காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றி வனப்பகுதிகள் அதிகமாகக் காணப்படுவதால், காட்டெருமை, சிறுத்தை, புலி, கடமான், புள்ளிமான், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கு வசித்து வருகின்றன. இந்நிலையில், சமீப காலமாக, வனப்பகுதியையொட்டி அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள் கட்டுவதாலும், மின்வேலி அமைப்பதாலும், வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரையொட்டிய கிராமங்களுக்கு வருகின்றன.
அப்போது, கிராமப்புறங்களில் விளைநிலங்களில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட், அவரை உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதற்கு உணவாகக் கிடைக்கிறது. இதனால், வனப்பகுதியில் இருந்து வரும் வனவிலங்குகள், மீண்டும் வனப்பகுதிக்கு திரும்புவது இல்லை. தேயிலை தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும், மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில், பேருந்து நிலைய சாலை ,மற்றும் மவுண்ட்ரோடு பகுதியில் இன்று காலை திடீரென உள்ளேப் புகுந்த காட்டெருமையைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் இந்த காட்டெருமை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள சோலைக்குள் புகுந்தது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டெருமையைத் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.