சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை தானம்

கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் 200 போர்வைகள் வழங்கப்பட்டன.

கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் 200 போர்வைகள் வழங்கப்பட்டன.

உலகம் முழுவதும் இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்றது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனையிலும் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. 

இந்த தினத்தையொட்டி எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ் நிறுவனம் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 போர்வைகள் வழங்கப்பட்டது. 



இந்த நிகழ்வில், புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய்தான் எனவும் நோயாளிகளிடம் கூறி நம்பிக்கை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் மண்டல பொறுப்பாளர் ஃபஸ்லூல் ரெஹ்மான், மருத்துவமனையின் இருப்பிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...