கோவை : மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்தைப் போன்று, தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்றும், அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் ஏற்றுக் கொள்ளாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
கோவை : மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்தைப் போன்று, தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்றும், அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் ஏற்றுக் கொள்ளாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது :- பொள்ளாச்சியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வரும் தர்ணா போராட்டம் போன்று, தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் ஏற்றுக்கொள்ளாது, என்றார்.
பழைய வாக்குச்சீட்டு முறை தொடர்பான கேள்விக்கு, நவீனத்தை ஏளனப்படுத்தக் கூடாது. ஓட்டையுள்ள பக்கெட்டில் தண்ணீர் எடுக்கக் கூடாது. ஆனால், ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும், காட்டு யானை சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் முயற்சி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்திருப்பதாவது :- வாழ்வாதாரம் பாதிப்பது என்பது ஒருவிதம். மிருகங்களின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சக்கட்டம். அதற்கான விளைவுகளை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மற்றும் நீதிமன்றத்தில் அரசு பதில் ஆகியவற்றில் உள்ள முரண்பாடு இருப்பது, அவர்களின் தனி குணாதிசியம். இதில், வியப்பு ஒன்றும் இல்லை. இரு நாக்குடையவர்கள்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவோம். நிர்வாகிகள் கூட்டணி குறித்து பல கருத்துக்களை சொல்லியுள்ளனர். பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தான் தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தில் கூட்டணிக்காக பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் கேட்டிருக்கின்றன. அதை இங்கு விவாதிக்கக் கூடாது, எனக் கூறினார்.